”தரணி போற்றும் அளவிற்கு தமிழ்நாட்டை நடத்திச் செல்கிறீர்கள்” என முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் விமானத்தில் பயணித்த சக பயணி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடிக்கு செல்வதற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமானத்தில் அமர்ந்திருந்தார். அவர் கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றிருக்கிறார். அப்போது, அதே விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் முதல்வர் அருகே வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினார். பின்னர், முதல்வரிடம் கவிதை பாடினார் அந்தப் பெண்மணி.

”தரணி போற்றும் அளவிற்கு தமிழ்நாட்டை நடத்திச் செல்கிறீர்கள்” என அப்போது அந்தப் பெண் புகழராம் சூட்டினார். கவிதை பாடிய பெண்மணிக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தார் முதல்வர். விமான பயணித்தின் போது அவருடன் பயணித்த பெண்மணியின் பெயர் கெளசல்யா என்பது தெரியவந்துள்ளது. அவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். 1990களில் ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற நாடகம் ஒன்றில் தான் நடித்த காட்சியை நினைவுகூர்ந்து தற்போதைய சூழலை சேர்த்து பேசிக் காட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.