fbpx

காதல் திருமணம் செய்த பத்தே நாட்களில் மணமகனை போட்டுத் தள்ளிய பெண் வீட்டார்…..! காதல் மனைவி கதறல்……!

விஞ்ஞானம், அறிவியல் , தொழில்நுட்பம் என்று பல்வேறு விதத்திலும் நாடு ஒருபுறம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஆணவக் கொலை, கௌரவ கொலை, சாதிய கொலை என்று இது போன்ற கொலை சம்பவங்கள் மட்டும் நாட்டின் குறைந்த பாடில்லை.

அந்த வகையில், கரூர் மாவட்டம் கருப்பம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (25) என்பவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கோபிகா (19) என்ற பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கோபிகா, கிருஷ்ணமூர்த்திக்கு சகோதரி உறவு முறை என்று கூறப்படுகிறது. இதனால் பெண் மீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில்தான் கிருஷ்ணமூர்த்தி கடந்த 21ஆம் தேதி ஒரு வழக்கு குறித்து திருச்சி தொட்டியம் பகுதியில் இருக்கின்ற நீதிமன்றத்திற்கு காரில் வந்தார். பின்னர் அந்த வேலையை முடித்துவிட்டு அதே காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தார். அதை எப்படியோ தெரிந்து கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மற்றொரு காரில் வந்து கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து கடத்திச் சென்றனர். வெகு நேரம் ஆன பின்னரும் கணவர் வீடு திரும்பாததன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த கோபிகா, தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த கடத்தல் குறித்து ஸ்ரீநாத் (24), கார்த்திக் (25), சரவணன் (29), கோபாலகிருஷ்ணன் (23) உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிருஷ்ணமூர்த்தியை காரில் நடத்திச் சென்று அவரை கொலை செய்து, கல்லணை ஆற்றில் உடலை வீசிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து, விளக்கை கொலை வழக்கமாக மாற்றிய காவல்துறையினர் அந்த நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதோடு, இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த கோபிகாவின் சித்தி இந்திரா, சித்தப்பா பிரகாஷ், ரவிவர்மன் என்பவரின் நண்பர்களான பத்ரி, மோகன் தலைமறைவாக இருக்கின்ற நிலையில், அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Post

கல்லூரி மாணவரை தாக்கி வழிப்பறி செய்த 3️ கொள்ளையர்கள்…….! காவல்துறையிடம் சிக்கியது எப்படி…..?

Tue Aug 1 , 2023
தற்போது தமிழ்நாடு முழுவதும் வழிப்பறி கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்துவிட்டனர். அவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற சமூக விரோத செயல்கள் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், சென்னை மதுரவாயல் கந்தசாமி நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் 17 இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்ற 28ஆம் தேதி […]

You May Like