fbpx

இறந்தவரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற பிரேசில் பெண்!! – வைரலாகும் வீடியோ!

பிரேசிலில் பெண் ஒருவர் மரணமடைந்த உறவினரை வங்கிக்குக் அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் பெண் ஒருவர், தனது 68 வயதான உறவினரை வங்கிக்கு கடன் பெறுவதற்காக சக்கர நாற்காலியில் அழைத்து வந்துள்ளார். அவர் சக்கர நாற்காலியில் வரும்போதே தலை தொங்கியிருந்தபடி இருந்துள்ளார். கடன் பெற சக்கர நாற்காலியில் அழைத்து வந்த நபர் கையெழுத்துப் போடும்போது மரணமடைந்ததாக வங்கி ஊழியர்கள் கருதினர்.

இதனால், ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள், அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்தனர். அவசர உதவி ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து அப்பெண்ணைக் கைது செய்தனர். இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியிருக்கிறது. 

Next Post

WHO | மனிதர்களுக்கும் பரவும் பறவை காய்ச்சல்.!! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.!!

Thu Apr 18 , 2024
WHO: உலக சுகாதார நிறுவனம் H5N1 பறவைக் காய்ச்சல் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கு பரவுவது குறித்த தனது கவலையை தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த நோயின் இறப்பு விகிதம் அசாதாரணமான வகையில் அதிகமாக இருப்பதாக விவரித்துள்ளது பறவை காய்ச்சல் மனித இனம் எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய கவலை என ஐ.நா சுகாதார அமைப்பின்(WHO) தலைமை விஞ்ஞானி ஜெர்மி ஃபரார் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் கூறினார். 2020 இல் தொடங்கிய பறவைக் […]

You May Like