fbpx

ரஷ்யா-உக்ரைன் போரில் இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி… ஐநா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்…

ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) தெரிவித்துள்ளது..

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 அன்று தொடங்கியது, நாட்டின் இராணுவம் எல்லைகளைத் தாண்டி கீவ் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. பல மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருவதால் போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக இதுவரை உக்ரைனில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.. மேலும் உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.. நாட்டில் டஜன் கணக்கான மனித உரிமை கண்காணிப்பாளர்களைக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு, அதன் வாராந்திர புதுப்பிப்பில் 5,024 பேர் கொல்லப்பட்டதாகவும் 6,520 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை ரஷ்ய இராணுவம் கைப்பற்றிய பின்னர் பொதுமக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைனில் உள்ள முழு நகரங்களும், பகுதிகளும் அழிக்கப்பட்டுவிட்டன. தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரத்தில் இருந்து கொடூரமான மற்றும் வெகுஜன இறப்புகளின் மிக முக்கியமான நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

புச்சாவின் தெருக்களில் பொதுமக்கள் பலரின் உடல்கள் கிடப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. மக்கள் அனைவரும் தலையின் பின்பகுதியில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக மேயர் மேலும் தெரிவித்திருந்தார். ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்ட மரியுபோல் நகரத்திலிருந்து இதே போல் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. மரியுபோல் நகரில் தெருக்களில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடப்பதாகவும், ஒரு வீட்டின் அடித்தளத்தில் 200க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Maha

Next Post

தங்கம் விலை மீண்டும் குறைந்தது... எவ்வளவு தெரியுமா..?

Wed Jul 13 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,280-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து […]

You May Like