fbpx

5 வருடத்திற்கு முன்பு வீட்டை விட்டு வேளியே சென்ற பெண்.. காவல் அதிகாரியாக திரும்பி வெற்றி..!

பீகார் மாநில பகுதியில் உள்ள முர்சாபூர் பகுதியை வசித்த 16 வயது சிறுமி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக  அளிக்கப்பட்ட புகார் அப்படியே கிடப்பில் கிடந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.ஹெச்.ஓ வாக வந்த அரவிந்த் குமார் என்பவர் இப்புகாரை எடுத்துள்ளார். 

புகாரின் பேரில் காணாமல் போன சிறுமியின் தகப்பனாரிடம் விசாரித்தபோது ஒரு 3 நபர்களை குறிப்பிட்டு அவர்கள்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அந்த மூன்று நபர்களையும் விசாரித்ததில் காவல்துறையினருக்கு கடத்தல் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. 

மேலும் தொடர் தேடுதலில் காணாமல் போன சிறுமியே கிடைத்துவிட்டார். கடந்த 2018ம் ஆண்டில் 16 வயதில் அந்த சிறுமி இருந்தபோது சிறுமியின் கல்வி பயில வேண்டும் என்ற ஆசையையும் மீறி அவருக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். 

இதன் காரணமாக வீட்டை விட்டு தப்பித்து டெல்லி சென்ற சிறுமி அங்கு தங்கி படித்து பல போட்டி தேர்வுகளை எழுதி வந்துள்ளார். தற்போது சமீபத்தில் டெல்லி கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலர் பணிக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் என்று தகவல் கிடைக்கப்பெற்றது.

அந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை என்றும் அந்த பெண்ணே கூறிய விளக்கத்தின் பேரில் இந்த புகாரானது முடித்துவைக்கப்பட்டது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய பெண் காவல் அதிகாரியாக திரும்பி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Baskar

Next Post

மனைவி மீது சந்தேகம்.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற கணவர்..!

Thu Jan 19 , 2023
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த சூலூர்பேட்டையை சேர்ந்தவர் செங்கையா (30) கட்டிட தொழிலாளியான இவருக்கும் உமாமகேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்கள் மூலம் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த தம்பதிகளுக்கு கிருத்திகா, விக்னேஷ்வர் என இரு குழந்தைகள் உள்ளனர்.  உமாமகேஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், உமாமகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், […]

You May Like