fbpx

பெட்டிக்கடை நடத்திய பெண் வெட்டிக்கொலை..!! போட்டுக்கொடுத்ததால் ஆத்திரம்..!! தேனியில் பயங்கரம்..!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரம் (48). இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். பெருமாள் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அதேபோல, இந்த தம்பதியின் மகனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதனால், 2 மகள்களையும் வளர்த்து கல்யாணம் செய்தது சமுத்திரம்தான். முதல் மகளை பொன்னம்மாள் பட்டியிலும், 2-வது மகளை காந்திபுரம் பகுதியிலும் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இதையடுத்து, காந்திபுரம் பகுதியிலேயே சமுத்திரம், வாடகைக்கு வீடு எடுத்து அதில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சமுத்திரம் அவருடைய வீட்டின் முன்பு சடலமாக கிடந்தார்.. உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் இருந்தன. விடியற்காலையில், பால் கறப்பதற்காக அங்குள்ளவர்கள் சிலர், அந்த வழியாக சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான், சமுத்திரத்தின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த போலீசார் சமுத்திரத்தின் உடலை மீட்டனர். அப்போதுதான், அவரது உடம்பில் கை, கால், கழுத்துக்கீழ் பகுதியில் வெட்டுக்காயங்கள் இருந்தன .

வெட்டுக்காயங்களால் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில், கிடந்த சமுத்திரத்தின் சடலத்தை, போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. விசாரணையையும் துவங்கியது.. அதே பகுதியைச் சேர்ந்த சொக்கர் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இதனால், அவரை விசாரிக்கலாம் என்று போலீசார் முயன்றபோது, அவர் காணாமல் போனார்.. இதனால் சந்தேகம் அவர் மீது அதிகரித்தது.

மாயமான சொக்கரை தேடும்பணி விரைந்து நடந்தது. மகள்களை வளர்ப்பதற்காக, பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தாராம் சமுத்திரம்.. காலையில் பால் கறப்பதற்காக அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது, சமுத்திரத்துக்கு உயிர் இருந்திருக்கிறது.. அவரை மீட்டு, சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பியும் வைத்திருக்கிறார்கள். ஆனால் வழியிலேயே சமுத்திரம் பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.. இதற்கிடையே தான் சொக்கரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது சொக்கருக்கு 35 வயது ஆகிறது. இவர் ஏற்கனவே கொலை வழக்கில் 12 ஆண்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார். தற்போது திருமணத்துக்கு பெண் பார்க்கும் நிலையில், அவர் பற்றி பெண்வீட்டாரிடம் சமுத்திரம் தவறாக கூறி வந்துள்ளதோடு அவரை தரக்குறைவாகவும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சொக்கர், சமுத்திரத்தை அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணுடன் பலமுறை உல்லாசம்..!! வீடியோ எடுத்து மிரட்டிய அரசு மருத்துவர்..!! பகீர் சம்பவம்

Mon Jun 5 , 2023
சென்னையில் அனல்மின் நிலைய அலுவலகத்தில் உள்ள மின்வாரிய மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சபரி மோகன் (32) என்பவர் பணிபுரிந்து வந்தார். இங்கு ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியரின் 28 வயது மகள் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்பெண் அடிக்கடி சிகிச்சைக்கு வந்து சென்றதால், மருத்துவருக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது மருத்துவர் சபரி மோகன் அப்பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். திருமணம் செய்து […]

You May Like