மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்.
திங்களன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பெண்கள் 33 சதவீத இடஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய சட்டத்துறை அமைச்சர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 454 பேரும் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரும் வாக்களித்துள்ளனர்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் 33 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்க முன்மொழிகிறது. 33 சதவீத ஒதுக்கீட்டிற்குள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு துணை இடஒதுக்கீட்டையும் மசோதா முன்மொழிகிறது. ஒவ்வொரு பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஒதுக்கப்பட்ட இடங்கள் மாற்றப்பட வேண்டும் என்று மசோதா முன்மொழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்டட பிரிவுக்கான (ஓபிசி) இட ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அழிப்பதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.