அல்லா என்ற வார்த்தை பண்டைய சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது என்று சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி கூறியுள்ளார்.
வாரணாசியின் கோவர்தன் பூரி மடத்தின் தலைவர் சங்கராச்சாரியார் நிஷ்சலானந்த் சரஸ்வதி இது குறித்து பேசிய போது “ அல்லா என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது.. இது பெண்ணின் சக்தியைக் குறிக்கிறது.. துர்கா தேவியிடம் பிரார்த்தனை செய்யப் இது பயன்படுகிறது.. ஒவ்வொரு இந்தியனும் கடந்த காலத்தில் ‘வேத’ ஆரியனாக இருந்தனர். உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது.. அது இந்து சனாதன தர்மம்.. மற்ற மதங்கள் அனைத்தும் வெறும் பிரிவுகள் தான்.. மதத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் முதலில் சமஸ்கிருத இலக்கணத்தை கற்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
‘அல்லா’ மற்றும் ‘ஓம்’ இரண்டும் ஒன்றே என்ற மௌலானா சயீத் அர்ஷத் மதனியின் கருத்தையும் நிஷ்சலானந்த் சரஸ்வதி சாடினார். மேலும் பண்டிட் திரேந்திர சாஸ்திரியை அவர் ஆதரித்து பேசினார்.. திரேந்திர சாஸ்திரி இந்துக்களை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் “ தான் ஒரு அதிசயம் செய்ததாக அவர் ஒருபோதும் கூறவில்லை, அவர் ஹனுமானின் சக்தியால் தான் நடந்தது என்று கூறுகிறார்,” என்று தெரிவித்தார்..