fbpx

வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல!… உச்சநீதிமன்றம்!

வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. அவர்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தை, பணத்தால் கணக்கிட இயலாது. அது மதிப்பிட முடியாத பங்களிப்பாகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழந்த உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம், இந்தப் பெண், குடும்பத் தலைவியாக உள்ளதால், தினசரி கூலி வேலை செய்வோர் ஈட்டும் வருவாயைவிட குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.

வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. அவர்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தை, பணத்தால் கணக்கிட இயலாது. அது மதிப்பிட முடியாத பங்களிப்பாகும். இந்த விஷயத்தில், தினக்கூலி வேலை செய்பவர்களைவிட குறைந்த அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அந்தப் பெண், குடும்பத் தலைவிதான் என்று கூறப்பட்டுள்ளதையும் ஏற்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தி, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது

Kokila

Next Post

திமுக ஊழல்!… 4வது ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை!… காங்கிரசின் தலையீடு அம்பலம்!

Sun Feb 18 , 2024
தி.மு.க., எம்.பி., ஆ.ராசா மற்றும் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட் உரையாடும் உரையாடல் இடம்பெற்றுள்ள 4வது ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2023 ஏப்., 14ல், தி.மு.க., பைல்ஸ் பாகம் ஒன்று வெளியிட்டார். அதில் தி.மு.க., – எம்.பி., ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன், முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது. அதை தொடர்ந்து, ஜூலை மாதம் தி.மு.க., […]

You May Like