fbpx

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார நிறுவனம்!… நொறுங்கி போகும் நிலை என கவலை!

இஸ்ரேல் படைகளின் பதிலடி தாக்குதலால் காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புகளுக்கிடையே 8ம் நாளாக இன்று போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காசாவில் உள்ள மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலின் தொடர் ஏவுகணை தாக்குதலுக்கு இடையே, மின்சாரம் இன்றி காசா மருத்துவமனைகள் தவித்து வருகிறது. மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு எகிப்து, சுத்தார் மற்றும் ஐ.நா. சபைக்கு ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில், காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹமாஸின் சமீபத்திய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தொடர்ந்து வான்வழி குண்டுவீச்சு நடத்தியதே இதற்குக் காரணம். மனிதாபிமான பேரழிவைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை. ஏனெனில் முற்றுகையானது காசாவிற்கு எரிபொருள் மற்றும் உயிர் காக்கும் பொருட்களை வழங்குவதை கடினமாக்கியுள்ளது. காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள், தினமும் சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் வழங்க முடியும் என்பதால், கடும் சவால்களை எதிர்கொள்கின்றன. 

Kokila

Next Post

வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய் கட்டுவது திருஷ்டிக்காக அல்ல..!! எதற்காக தெரியுமா..? முன்னோர்கள் சொன்ன காரணம்..!!

Sat Oct 14 , 2023
வீட்டின் வாயிலில் எலுமிச்சம் பழமும், பச்சை மிளகாயும் சேர்த்து கோர்க்கப்பட்ட கயிறு கட்டப்படுவது எதற்கு தெரியுமா? சிலர் திருஷ்டி கழிக்க என்கிறார்கள். ஆனால், அது உண்மையில் திருஷ்டிக்காக அல்ல. நம் முன்னோர்கள் எதையும் காரண, காரியத்துடன்தான் செய்திருக்கிறார்கள். எலுமிச்சையும், பச்சை மிளகாயும் வைட்டமின் சி சத்து நிறைந்தவை. இதனை நூலில் கோர்த்துக் கட்டும்போது, அதில் இருக்கும் சாறு நூலில் இறங்கி காற்றில் பரவும். இதனால் காற்றில் உள்ள கிருமிகள் வீட்டுக்குள் […]

You May Like