எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிக உயரமான சிகரம் என்றால், அது எவரெஸ்ட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், திடீர் திருப்பமாக உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் கிடையாது என விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளனர். ஏனென்றால், தற்போது அதை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும், பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையே இரண்டு மாபெரும் மலைகள் அமைந்துள்ளன.
அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை
இதுகுறித்து ‘நேச்சர்’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், ”பூமியின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மலைகள் எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானது.
இவை இரண்டும் சுமார் 1,000 கிலோமீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இது எவரெஸ்ட் சிகரத்தின் 8.8 கிலோமீட்டர் உயரத்தை விட மிக மிக அதிகம். இந்த இரண்டு மலைகளும் அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. மேலும், பூமி உருவாகும் முன்பே இது உருவாகியிருக்கலாம்” என்று கூறப்படுகிறது.