பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக எங்கு சென்றாலும் அது மிகவும் பரபரப்பாக பேசப்படும். அதேப்போல சில நடிகர் நடிகைகள் தங்களின் காதல் உறவுகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவிப்பது உண்டு. ஒரு சிலர் தங்களின் மார்கெட் குறைந்து விடும் என்றும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு போன்ற காரணங்களாலும், தங்களது காதலை வெளி உலகுக்கு தெரிவிக்காமல் இருப்பர். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் இருவரும் ஒன்றாக புத்தாண்டை கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பலரால் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், தங்களுக்குள் அப்படி ஒரு உறவு இல்லை என இருவரும் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இரண்டு பேரையும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. இரண்டு பேரும் எங்கு புத்தாண்டை கொண்டாடினார்கள் என ஆராய்ச்சியில் தான் அனைத்து ரசிகர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் அடுத்தடுத்து டிவிட்டரில் புத்தாண்டு வாழ்த்துகளை தங்களது ரசிகர்களுக்கு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் இருக்கும் இடம் குறித்து தெரிவிக்கவில்லை. எனவே ரசிகர்களுக்கு சந்தேகம் வலுத்து வருகிறது. இருவரும் மாலத்தீவில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.