fbpx

‘வருடம் முழுவதும் 25 பெண்களுடன் உல்லாசம்..’ வடகொரிய அதிபரின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆண்டுக்கு 25 பெண்களை தேர்வு செய்து அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக, அங்கிருந்து தப்பி வந்த பெண் அளித்துள்ள பேட்டி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

வங்கதேசத்தின் ‘தி டெய்லி ஸ்டார்’ ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி வகுப்பாறைகளையும் பார்வையிடுவார்கள். அப்படி அவர்கள் கண்ணில் படும் அழகான பெண்களின் குடும்பப் பின்னணியையும், அரசியல் நிலைப்பாட்டையும் தெரிந்து கொண்டு தேர்வு செய்வார்கள்.

வட கொரியாவிலிருந்து தப்பியோடிய அல்லது தென் கொரியா உட்பட பிற நாடுகளில் உறவினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட எந்தவொரு பெண்ணையும் அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள். இப்படியாக அந்த அதிகாரிகளால் தேர்வு செய்யப்படும் பெண்களின் பணி என்பது, வட கொரிய அதிபரை அனைத்து வகை அனைத்து வகையிலும் மகிழ்விப்பது தான் என்ற அதிர்ச்சி செய்தியை யோன்மி பார்க் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுதோறும் சுமார் 25 அழகான பெண்களை இதற்காகவே தேர்வு செய்கிறார்கள். பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அவர்களை மசாஜ் அளிப்பதற்கு, ஆடிப்பாடி மகிழ்விப்பதற்கு, பாலியல் செயல்களுக்கு என்று தனியாக குழுவாக பிரிக்கின்றனர். மேலும் அதிபருக்கு மட்டுமல்லாமல் அரசியல் தலைவர்கள், ராணுவத்தில் உயர் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்கும் இந்த பெண்கள் மகிழ்விக்க வேண்டும் என்று யோன்மி பார்க் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

Next Post

'செல்போன் லைட்டில் அறுவை சிகிச்சை..' தாயும் சேயும் உயிரிழந்த பரிதாபம்!

Fri May 3 , 2024
மாநகராட்சி மருத்துவமனையில், மின்சாரம் தடைப்பட்டதால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் போது, தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குசுருதீன் அன்சாரி. இவரது 26 வயது மனைவி ஷாஹிதுன் என்ற மனைவி உள்ளார். 9 மாத கர்ப்பிணியான இவர் கடந்த திங்கட்கிழமையன்று மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி ஏற்படாததால், […]

You May Like