fbpx

சொந்த அண்ணனையே திருமணம் செய்து கொண்ட தங்கை..!! காரணத்தை கேட்டா அதிர்ந்து போவீங்க..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அண்ணன், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதனால், அந்த பெண்ணுக்கும் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா இல்லை. தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது ஆஸ்திரேலியாவில் எளிது என்கிற சட்டம் இளம்பெண்ணின் மூளையில் சாத்தானைப் போல குறுக்கு வழியை யோசிக்க செய்துள்ளது. இந்த சட்டத்தை வைத்து அண்ணன், தங்கை இருவரும் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். அதன் பிறகு, அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த படியே விசாவையும் எளிதாக பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதற்கிடையே, இரு நாட்டு சட்ட அமைப்புகளையும் அவர்கள் ஏமாற்றியது பின்னர் தெரியவந்தது.

அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்காததால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தடைகளை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் கூறுகையில், சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அவர்கள் முதலில் ஒரு குருத்வாராவிடம் இருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று, துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. குடியேற்ற ஊழலில் அவரது சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தனர்.

Chella

Next Post

#Breaking..!! டெல்டாவில் தொடரும் கனமழை..!! 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

Fri Feb 3 , 2023
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான […]

You May Like