fbpx

என்னை உருவாக்கியதே திமுக இளைஞர் அணி…! முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து…!

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில்; நான் வளர்ந்த, என்னை வளர்த்துவிட்ட, நான் உருவாக்கிய, என்னை உருவாக்கிய பாசறைதான் இளைஞர் அணி. அடக்கமாக, அமைதியாக, ஓய்வின்றி உழைக்கிறேன் என நீங்கள் என்னை பாராட்டுகிறீர்கள் என்றால், அதற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது இளைஞர் அணிதான். தமிழ்நாட்டில் என் கால்படாத இடங்களே இல்லை என சொல்லும் அளவிற்கு பயணம் செய்தேன். திமுகவிற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.

நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமே இளைஞரணிதான். ஆற்றல் மிக்க இளைஞர்கள் என்னை சுற்றி இருப்பதால்தான் நான் சுறுசுறுப்பாக இருக்கிறேன். தற்போது இளைஞரணியை வழிநடத்த உங்களுக்கு உதயநிதி கிடைத்துள்ளார். அவரை இறுகப்பற்றி கொள்ளுங்கள். அவர் பொறுப்புக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞரணியை கட்டி எழுப்பி வருகிறார்.

வலிமையான கொள்கை, உறுதியான பிடிப்பு, இனிமையான பரப்புரை, தொடர்ச்சியான உழைப்பு இவையனைத்தும் அவரிடம் இயல்பாகவே இருப்பவை. கலைஞர் எங்கள் மீது வைத்த நம்பிகையை நாங்கள் காப்பாற்றியது போல, என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, வெற்றிப்படையாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

டீப்ஃபேக் வீடியோ விவகாரம்!… குற்றவாளி கைது!... காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா!

Sun Jan 21 , 2024
டீப்ஃபேக் வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, காவல்துறை அதிகாரிகளுக்கு ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஆபாச போலி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து விசாரித்தது. இதையடுத்து டெல்லி […]

You May Like