fbpx

சிறுவனின் ஜாமென்ட்ரி பாக்சில் இருந்த 50 ரூபாய் திருட்டு; நடிகையின் வீட்டில் திருடன் செய்த அட்ராசிட்டி!!

சமீப காலமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் கொடியில் காய வைக்கும் துணிகளை கூட விடாமல் திருடி செல்லும் திருடர்கள் பெருகி விட்டனர். இதை கூட வாடா திருடுவ என்று நம்மை வியக்க வைக்கும் பல திருடர்கள் உள்ளனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் வீட்டில் திருடப்பட்டுள்ளது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகை தீபா பாஸ்கர். நடிகை தீபா பாஸ்கர் சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டனில் வசித்து வருகிறார். இவர் தனக்கு பிறந்த நாள் என்பதால், தனது குடும்பத்தினரோடு வெளியில் சென்றுள்ளார். பின்னர், இரவு வீடு திரும்பியபோது பீரோவில் இருந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா கதறி அழுதுள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

தீபா பாஸ்கர் பணத்தை பீரோவில் வைக்காமல் வேறு இடத்தில் மறைத்து வைத்ததால் அவரது பணம் தப்பிய நிலையில், பிறந்தநாளை ஒட்டி வெளியே சென்ற போது நகைகளையும் அணிந்து சென்றதால் நகைகளும் தப்பின. மேலும், மற்ற நகைகளை அவர் குழந்தையின் பொம்மை டப்பாவில் மாற்றி வைத்திருந்துள்ளார் இதனால் கொள்ளையர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதையடுத்து, வாசனை திரவிய பாட்டில், தீபா பாஸ்கர் மகனின் ஜாமென்ட்ரி பாக்சில் உள்ள 50 ரூபாய், மற்றும் 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடன் திருடிச் சென்றுள்ளான். இந்நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களைத் தேடி வருகின்றனர்.

Read more: 16 வருடங்களாக, யாருக்கும் தெரியாமல் முடியை சாப்பிட்டு வந்த பெண்; சிகிச்சை அளித்த மருத்துவர் சொன்ன அதிர்ச்சி காரணம்..

English Summary

theft-in-actress-home

Next Post

காதலன் முன் நிர்வாணமாக நின்ற பெண்; இருவருக்கும் நீ தான் வேண்டும் என்று அடம்பிடித்த சகோதரர்கள் செய்த காரியம்..

Mon Nov 11 , 2024
twins-wished-to-have-relationship-with-one-girl

You May Like