fbpx

Annamalai: சாய ஆலைகளுக்கு தண்ணீர் திருட்டு… செய்தியாளர் மீது தாக்குதல்…! உடனே குரல் கொடுத்த அண்ணாமலை…!

நாமக்கல்லில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; நாமக்கல் அருகே, காவிரி ஆற்றிலிருந்து, சட்ட விரோதமாக மின்மோட்டார்கள் மூலம், சாய ஆலைகளுக்கு தண்ணீர் திருடுவதைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தங்கமணி மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பொதுமக்கள், அரசு அலுவலர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து திமுகவினராலும், சமூக விரோதிகளாலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். கடந்த வாரம், போதை மருந்து கடத்தல்காரர்கள் நிறுவனத்தில் நடந்த சோதனை குறித்த செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர்.

சட்டவிரோதச் செயல்களைச் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதுகாத்து, அதனை மக்களுக்குக் கொண்டு செல்லும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், போலி வழக்கு பதிவு செய்வதும் என, திமுக அரசு, ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்குகிறது. உடனடியாக, இந்தச் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகவியலாளர் சகோதரர் திரு. தங்கமணி அவர்களைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார் .

Vignesh

Next Post

பரபரப்பு...! இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ரவி...! என்ன காரணம்...?

Fri Mar 8 , 2024
ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் ரவி. தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது. சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக (முன்னாள்) நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் […]

You May Like