fbpx

“உண்மையாக பாதிக்கப்பட்டவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்..”! பூனம் பாண்டே ஸ்டண்ட் குறித்து கண்டனம்.!

சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார் என்று செய்தி நேற்று இணையதளத்தில் பரவியது. இதனைத் தொடர்ந்து பலரும் அவரது மறைவிற்காக அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் அவர் வீடியோ வெளியிட்டு உயிரோடு நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் இந்த வீடியோவில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி இருந்தார்.

தனது மரணச் செய்தி குறித்து பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோவில் ” நான் உயிரோடு இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்று நோயால் மரணம் அடையவில்லை. ஆனால் அந்தப் புற்று நோய் ஏராளமான பெண்களின் உயிரை குடித்திருக்கிறது. மேலும் மற்ற புற்று நோய்கள் போல் இல்லாமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசிகள் இருக்கிறது. பெண்கள் எச்பி வி தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது பதிவில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி இருக்கிறார் பூனம் பாண்டே.

இதுபோன்று போலியான செய்திகளின் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தனது கருத்தை வெளியிட்டு இருக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரோகித் வர்மா ” கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது சரியான அணுகுமுறை இல்லை. அந்த வகை புற்றுநோயால் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ள ஏராளமானோர் தீவிரமாக சிகிச்சை எடுத்து வரும் நிலையில் இது போன்ற ஒரு பொய்யின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு தவறான முன்னுதாரணம். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

Next Post

ராணி 2ஆம் எலிசபெத்தின் Range Rover கார் ஏலம்..!! இவ்வளவு அம்சங்களா..? விலை எவ்வளவு தெரியுமா..?

Sat Feb 3 , 2024
மறைந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Range Rover கார் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. பிரிட்டன் சாம்ராஜ்யத்தை நீண்ட காலம் ஆண்ட மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் பயன்படுத்திய Custom Range Rover கார் விற்பனைக்கு வந்துள்ளது. ராணி எங்கு செல்ல வேண்டுமென்றாலும், இந்த சிறப்பு காரை பயன்படுத்துவார். அதனுடன் பாரிய கான்வாய் எப்போது செல்லும். அவரது மரணத்திற்குப் பிறகு, இந்த Loire blue Range Rover காரை Bramley […]

You May Like