இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
மீனவர்கள் சித்ரவதை செய்யப்படுவதை ஒன்றிய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக கூறிய மீனவர்கள், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். பிப்.20ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து நடைபயணமாக சென்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.