fbpx

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (ஜனவரி 20) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜனவரி 20) தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஞாயிறு முதல் வியாழன் (ஜனவரி 21-25) வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (ஜனவரி 20) இரவு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் இருக்கும். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 10 மி.மீ. மழை பதிவானது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு..!! இந்த 4 மாவட்டங்களிலும் இன்று செயல்படும்..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

Sat Jan 20 , 2024
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, இந்த 4 மாவட்டங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்போது அறிவித்திருந்தார். இதையடுத்து, அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 2ஆம் தேதி முதல் பள்ளிகள் […]

You May Like