fbpx

ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது..! பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? – டிடிவி தினகரன்

”கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார்” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவில் நடக்கும் சண்டையில் நான் இல்லை. நான் தனிக்கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ளது. நாங்கள் நடத்தும் போராட்டத்தில் வெற்றிபெறுவோம். அதிமுகவை திரும்பப்பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதிமுகவையும், அமமுகவையும் இணைப்பதற்கு டெல்லியில் சில நலம் விரும்பிகள் முயற்சி மேற்கொண்டது உண்மை தான். திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்துக்கு நான் சம்மதித்தேன். எடப்பாடி பழனிசாமியிடம் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் இல்லை. ஆனால், அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் முதலமைச்சர் வேட்பாளராக அவரை களம் இறக்கக்கூடாது என்று தெரிவித்தேன். அவரை முன்னிலைபடுத்தினால் அதிமுக வெற்றி பெறாது என்றேன். ஆனால், எங்களது முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. அதனால் டெல்லி மேலிடமும், எடப்பாடி பழனிசாமியை கை கழுவி விட்டனர்.

ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது..! பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? - டிடிவி தினகரன்

கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி சீனியராக இருந்ததால் அவரை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். ஆனால், அவர் கட்சி தொண்டர்களுக்கும், சசிகலாவுக்கும் மிகப்பெரிய துரோகம் செய்து விட்டார். எடப்பாடி பழனிசாமியை எந்த விதத்திலும் நம்ப முடியாது. சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தபோது அவர் தமிழகத்துக்கு வந்து செல்ல அனுமதி கொடுக்க மறுத்தார். அரசியலுக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டு எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்த்தது மிகப்பெரிய தவறாகும். அதை அவர் இப்போதுதான் உணருகிறார். எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது..! பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? - டிடிவி தினகரன்

ஆனால், எடப்பாடி பழனிசாமியுடன் எந்த காலத்திலும் சேரும் எண்ணம் இல்லை. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா டான்சி வழக்கில் சிறை சென்றபோதே மிக எளிதாக முதலமைச்சர் ஆகி இருக்க முடியும். ஆனால், நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஆக்கினோம். நான் போராட்ட குணம் கொண்டவன். போராடி மக்கள் ஆதரவுடன் நிச்சயமாக ஆட்சியை பிடிக்க முடியும். 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தபோது அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவிடம் தான் விசுவாசம் காட்டினார்கள். அதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை பதவி விலக சொன்னார்கள். ஆனால், அவர் தர்மயுத்தம் நடத்தினார். பிறகு மோடி பேச்சை கேட்டு எடப்பாடி பழனிசாமியிடம் சேர்ந்தார்.

ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது..! பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? - டிடிவி தினகரன்

தற்போது ஓ.பன்னீர்செல்வம் என்னுடன் ரகசிய தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் உண்மை இல்லை. அவர் என்னிடம் எப்போதும் தொடர்பு கொண்டதே கிடையாது. அவர் எனது நண்பர். 10 ஆண்டுகள் நாங்கள் இணைந்து அரசியல் பணிகள் செய்துள்ளோம். பிரச்சனை ஏற்பட்ட சமயத்தில் ஒரு வாரம் மட்டும் அவர் அமைதியாக இருந்திருந்தால், இப்போது நடக்கும் அரசியல் நாடகம் எல்லாம் நடந்திருக்காது. சசிகலாவுக்காக நாங்கள் தலைவர் பதவியை தயாராக வைத்துள்ளோம். நீதிமன்றத்தில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் உரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தால், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்பார். அதன்பிறகு மக்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

ஓபிஎஸ் உடன் இணைய வாய்ப்பு உள்ளது..! பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி..? - டிடிவி தினகரன்

2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று நினைக்கிறேன். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக விலக வாய்ப்பு உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்களின் சமீபத்திய பேச்சுகள் இதை பிரதிபலிப்பதாக உள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார். மேற்கு வங்காளத்தில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கலாம். எனவே, தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதிமுக தொண்டர்கள் என்னை விரும்புகிறார்கள். மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக மிக முக்கியமானது. பாஜக உரிய மரியாதை கொடுத்தால் தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்வேன். இல்லையென்றால் தனியாக போட்டியிடுவோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கோவிஷீல்டு, கோவாக்ஸின் போட்டவர்கள் இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக போட்டுக்கொள்ளலாம்..

Wed Aug 10 , 2022
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என்று மருத்துவர்கள் கூறுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலும் கொரோனாவின் 4-வது அலை குறித்து நிபுணர்கள் எச்சரித்து வரும் நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் கடந்த ஜனவரி முதல் முதல் முன் கள பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், மூத்த குடிமக்கள் […]

You May Like