fbpx

“ செவ்வாய் கிரகத்தில் நீர்.. தெளிவான ஆதாரம் இருக்கு..” நாசா வெளியிட்ட புதிய தகவல்..

செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி தொடர்பாகவும், மற்ற கிரகங்கள் தொடர்பாகவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. மேலும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி வருகிறது.. மேலும் ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய மலை மீது கியூரியாசிட்டி ஆய்வு செய்து வந்தது. இந்த மலை பல கனிமங்களால் உருவானது என்பது தெரியவந்துள்ளது..

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. 18,000ம் அடி உயரமுள்ள இந்த மலையின் மறுபக்கத்துக்கு கியூரியாசிட்டி சென்றுள்ளது. அங்கு, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு ஆறு ஓடியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இது குறித்து நாசாவின், கியூரியாசிட்டி திட்ட மூத்த விஞ்ஞானியான அஸ்வின் வசவாடா பேசிய போது “ செவ்வாய் கிரகத்தில், முன்னொரு காலத்தில் ஆறு ஓடியுள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன.

இது, நம் ஆய்வில் கிடைத்துள்ள புதிய தகவலாகும். அதாவது ஒரு ஆறு ஓடி, வறண்ட பின், அந்தப் பகுதியில் மணல் உள்ளிட்டவற்றை அரித்து சென்ற தடங்கள் தெரியும். இதுபோன்ற தடங்கள் தற்போது கிடைத்துள்ளன. செவ்வாயில், பல நுாற்றாண்டுகளுக்கு முன், நீர் மட்டுமல்ல, ஆறு ஓடியுள்ளது என்பதை இது நிரூபிக்கும் வகையில் உள்ளது. நாங்கள் இதுவரை பார்த்த நீர் மற்றும் அலைகளின் சிறந்த சான்று இதுவாகும். இது போன்ற சான்றுகள் இதற்கு முன்பு கிடைத்ததில்லை..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

கோவை அருகே சோகம்: விசேஷத்திற்கு வந்த மூன்று பெண்கள் ஆற்றில் மூழ்கி பலி!

Sun Feb 12 , 2023
கோவை மாவட்டத்தில் கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்கள்  ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை விநாயகர் கோவில் வீதியைச் சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் மோனிகா. இவர் தனது மகள் மற்றும்  தங்கை, மருமகள்  ஆகியோருடன் உறவினர் வீட்டின்  கிரகப்பிரவேச நிகழ்விற்காக சென்றுள்ளார். அப்போது  அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு  சிறுமுகை அடுத்து உள்ள  வச்சினம் பாளையம் அருகே […]

You May Like