fbpx

’இனி மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை’..!! மக்களே செம குட் நியூஸ்..!!

சமீபத்தில் மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மணலியில் 400 கிலோ வாட் திறன் கொண்ட யூனிட்டில் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் மின்சார விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.

இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நங்கநல்லூர் 33/11 KV துணை மின் நிலையத்தில் கூடுதல் 1x16MVA புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ்நாடு சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி 5,979 மெகாவாட்டாக உயர்ந்தது. முன்னதாக, ஆகஸ்டு 2ஆம் தேதி 5,704 மெகாவாட் உற்பத்தி பதிவாகியிருந்தது. அதேபோல், சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பில் 41.40 மில்லியன் யூனிட் (mu) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவு ஆகும். முன்னதாக, ஆகஸ்டு 3ஆம் தேதி 40.9 மியூ அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டது.

இது போக தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனி மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில், மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மின்சார வாரிய அதிகாரிகள், ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனி டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்கிக் கொள்ள முடியும்.

Read More : ’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’..!! ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’..!! நடிகர் சக்தி வேதனை..!!

English Summary

Electricity Board has issued a new notification. In that way, Tamil Nadu has reached a new peak in solar power generation.

Chella

Next Post

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2வயது குழந்தை!. விடிய விடிய நடக்கும் மீட்புப்பணி!. அதிர்ச்சி காட்சிகள்

Thu Sep 19 , 2024
Rajasthan: Two-year-old girl falls into borewell in Dausa's Bandikui, rescue ops underway

You May Like