Raina: எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரர் யார் என்றால் மகேந்திர சிங் தோனி என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்.
இங்கிலாந்தில் முன்னாள் வீரர்கள் விளையாடும் லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் லீக் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பங்குபெற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் இருந்து வருகிறார். மேலும் இந்த அணியில் பிரபல முன்னாள் இந்திய வீரர்கள் ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா இர்ஃபான் பதான் யூசுப் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் போன்றோர் விளையாடி வருகிறார்கள். இந்த தொடரில் விளையாடி வரும் சுரேஷ் ரெய்னாவிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டதற்கு அவர் வியப்பான பதில்களை அளித்திருக்கிறார்.
சுரேஷ் ரெய்னாவிடம் முதல் கேள்வியாக டெத் ஓவர்களில் சிறந்த பவுலர் யார் என்று கேட்கப்பட்டது அவர் பும்ராவை தேர்வு செய்தார். அடுத்து தொடர்ந்து சிறப்பாக விளையாடும் வீரர் யார் என்ற கேள்விக்கு மைக்கேல் ஹசியை கூறினார். இதற்கு விராட் கோலியை கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு அடுத்து வேடிக்கையான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு ஹர்பஜன் சிங்கை தேர்ந்தெடுத்தார். அடுத்து மிக எளிதாக ரன் மெஷின் யார் என்ற கேள்விக்கு விராட் கோலியை தேர்ந்தெடுத்தார். இதற்கு அடுத்து எல்லா காலத்திலும் சிறந்த கோட் வீரர் யார் என்ற கேள்விக்கு யோசிக்காமல் மகேந்திர சிங் தோனி என பதிலளித்தார்.
Readmore: தொகுதி மக்களுக்கு கட்டளை போட்ட கங்கனா ரணாவத் எம்.பி.!. கடும் கண்டனங்கள்!