fbpx

“ இதுக்கு அந்த 25 கோடி பரிசு கிடைக்காமயே இருந்திருக்கலாம்..” அதிர்ஷ்டக்கார ஆட்டோ ஓட்டுநர் வேதனை..

கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாயை ஆட்டோ டிரைவர் ஒருவர் வென்றார்.. திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவருக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது.. தனது மகள் உண்டியலில் சேர்த்துவைத்திருந்த பணத்தை எடுத்து லாட்டரி வாங்கிய அனூப், விரைவில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல திட்டமிருந்தார். இதற்காக, கேரள கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்தார். இப்போது லாட்டரி பரிசு கிடைக்க, லோனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் திட்டத்தையும் கைவிட்டுளளார்.

25 கோடி ரூபாய் பரிசை வென்ற அனூப்புக்கு 10 சதவிகிதம் ஏஜென்ட் கமிஷன் மற்றும் 30 சதவிகிதம் வரி போக 15.75 கோடி ரூபாய் கிடைக்கும். இவ்வளவு பணம் கிடைக்கப்போகும் சந்தோசத்தில் அனூப் இதுநாள் வரை இருந்து வந்தார். ஆனால், நேற்று தான் சந்தோசத்தில் இல்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், “லாட்டரி பரிசு கிடைத்தபோது சந்தோஷமாகவே இருந்தது. ஆனால், இப்போது எனது மகிழ்ச்சி அனைத்தும் போய்விட்டது. காரணம் வெளியே எந்த இடத்துக்கும் என்னால் போக முடியவில்லை. உதவிகேட்டு நிறையபேர் வருகிறார்கள். என் கையில் இன்னும் பணம் வந்துசேரவில்லை. இதை அவர்களிடம் சொன்னால் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். கொஞ்சமாவது பணம் கொடு என்கிறார்கள். அதனால் தான் எனது வீட்டில் என்னால் இருக்க முடியாமல் தலைமறைவாக உள்ளேன்.

நான் எங்குச் சென்றாலும், என்னை தேடி வருகிறார்கள். இதனால் குழந்தையை பார்க்க முடியாமல், தலைமறைவாக உள்ளேன். எனக்கும் உதவி செய்யும் எண்ணம் உள்ளது. ஆனால், பணம் இன்னும் வந்துசேரவில்லை என்ற நிலையை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கிடைக்காமல் போயிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்

Maha

Next Post

எந்த சண்டை சச்சரவும் இல்லை.. ஒரே வீட்டில் 3 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழும் கணவர்.. வைரல் வீடியோ..

Sat Sep 24 , 2022
ஒரு பெண் எதை வேண்டுமானாலும், பிறருக்கு விட்டுக் கொடுப்பார்.. ஆனால் தனது கணவரை மட்டும் யாருக்காக விட்டுக்கொடுக்க மாட்டார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு பெண் தனது சகோதரிகளையும் தனது கணவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.. அந்த சகோதரிகளின் எந்த சண்டை, சச்சரவும் இல்லையாம்.. இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில் பேசும் முதல் மனைவி கிறிஸ்டின், […]

You May Like