fbpx

கொரோனா பரவல் இல்லை.. ஆனாலும் லாக்டவுன் போட்ட வடகொரிய அதிபர்.. என்ன காரணம் தெரியுமா..?

வடகொரியாவில் ராணுவ நிகழ்ச்சியின் போது போது 653 தோட்டாக்கள் காணாமல் போனதை அடுத்து, ஒட்டுமொத்த நகரிலும் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்…

வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.. அங்கு சிறிய தவறுகளுக்கு கூட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.. மேலும் அங்கு பல விசித்திரமான சட்டங்களும், விதிகளும் நடைமுறை உள்ளன.. இந்நிலையில் வடகொரியாவில் உள்ள ஹைசன் நகரில் லாக்டவுன் விதித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.. சுமார் 200,000 மக்கள் வசித்து வரும் அந்நகரில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின் போது, 653 தோட்டாக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஹைசன் நகரில் லாக்டவுன் விதித்துள்ளார்.. அனைத்து தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்படும் வரை அந்நகரம் லாக்டவுனில் இருக்கும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 10 வரை ராணுவ நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், மார்ச் 7 அன்று தோட்டக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூகக் குழுக்கள் மற்றும் சுற்றுப்புறக் கண்காணிப்புக் குழுக்களுக்கு விசாரணைக்கு உதவுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டின் அணு ஆயுதக் களஞ்சியத்தை அதிகரிப்பதற்காக, ஆயுதம் தர அணுசக்தி பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கிம் ஜாங் உன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.. மேலும் துப்பாக்கிகளை எல்லா நேரங்களிலும் பயன்படுத்த தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் கிம் ஜாங் உன் கூறியிருந்தார்.. இதனிடையே கடந்த திங்கள்கிழமை, 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Maha

Next Post

கள்ளக்காதலனுடன் ஜாலி ரெய்டு..!! விரட்டிப் பிடித்த கணவன்..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

Wed Mar 29 , 2023
சென்னையின் புறநகர் பகுதியான படப்பையின் காந்தி நகரில் சிவா (30) பூமாதேவி (26) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லோகேஷ்வரி (8) என்ற மகளும், சதீஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூமாதேவிக்கு, ஒரத்தூரை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் வேலை செய்யும் சுந்தருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக […]

You May Like