fbpx

’மரங்களை வேரோடு மாற்றுவதற்கு தொழில்நுட்பம் இருக்கு’..! ‘அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க’..! ஐகோர்ட் கிளை

மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், திருச்சி, திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. திருவனைக்கோயில் முதல் சுங்கச்சாவடி சாலை வரை உள்ள பகுதி முக்கிய சாலை அல்ல. மேலும், இந்த சாலை 70 அடி அகல பாதையாகும். இந்த சாலையில் பெரிய வாகனங்கள் முதல் சிறிய வாகனங்கள் வரை செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

’மரங்களை வேரோடு மாற்றுவதற்கு தொழில்நுட்பம் இருக்கு’..! அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க..! ஐகோர்ட் கிளை

இந்த சாலையில் அமைந்துள்ள மரங்கள் 40 ஆண்டுகள் பழமையானவை. இதனை வெட்டுவதால் காற்று மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மேற்குறிப்பிட்ட சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் நடைபாதை அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

’மரங்களை வேரோடு மாற்றுவதற்கு தொழில்நுட்பம் இருக்கு’..! அப்புறம் ஏன் இப்படி செய்றீங்க..! ஐகோர்ட் கிளை

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு தொழில்நுட்பம் இருக்கும்போது மரத்தை ஏன் வெட்டுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Chella

Next Post

சக தொழிலாளியை கடப்பாரையால் துடிதுடிக்க அடித்து கொன்ற கொடூரம்... சீட்டு விளையாட்டால் நேர்ந்த பரிதாபம்..!

Mon Sep 5 , 2022
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், அத்தாணி சாலையில் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சாலையோரத்தில்  கழிவுநீர் கால்வாய் அமைக்கும் வேலை நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கவுண்டபாளையத்தில்  தகர கொட்டகை அமைத்து தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பணிமுடிந்து கூடாரத்துக்கு திரும்பிய தொழிலாளர்கள் சீட்டுகட்டு விளையாடினர். அப்போது, குமரி மாவட்டத்தை சேர்ந்த சுஜின்(40) மற்றும் ரமேஷ்(32) […]

You May Like