fbpx

’உடம்புல ஒட்டு துணி கூட இருக்கக் கூடாது’..!! மனைவியை நிர்வாண பூஜைக்கு டார்ச்சர் செய்த கணவன்..!! நண்பனின் பேச்சை கேட்டதால் விபரீதம்..!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாமரசேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பரிகார பூஜை செய்ய வேண்டுமென தனது கணவர் வலியுறுத்துவதாகவும், பரிகார பூஜை செய்வதற்காக தனது கணவரிடம் பிரகாசன் என்பவர் தொடர்ந்து கூறி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், நிர்வாண பூஜை செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கணவர் தன்னை வற்புறுத்துவதாகவும், பிரகாசனும் தன்னை பின் தொடர்ந்து பரிகார பூஜைக்கு சம்மதிக்க வேண்டும் என வற்புறுத்தி வருவதாகவும் அந்த புகாரில் இளம்பெண் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தாமரசேரி போலீசார் விசாரணை நடத்தினர். விருப்பங்கள் நிறைவேற்றிக் கொள்ள நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் பிரகாஷ் தொடர்ந்து வலியுறுத்தியது விசாரணையில் தெரியவந்தது.

அதற்கு இளம்பெண்ணின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, பெண்ணின் கணவர் மற்றும் பூஜைக்கு தூண்டிய பிரகாசன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், ”எங்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. என் கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியவந்ததால், வீட்டில் பிரச்சனை ஏற்பட்டது.

அதே சமயம் என் கணவரின் நண்பரான பிரகாசன் வீட்டிற்கு வந்து ஒரு சிறு குடத்தில் தண்ணீர் எடுத்து அது ரத்தம் போன்று காட்சியளிப்பதாக காட்டினார். ஆனால், அந்த தண்ணீரில் அவர் சிவப்பு பொடியை கலப்பதை நான் பார்த்தேன். எனது கணவருக்கு பிரம்ம ரக்‌ஷஸ் பிடித்திருப்பதாக என்னிடம் கூறிய பிரகாசன், எனக்கு வாதை பிடித்திருப்பதாக என் கணவரிடம் கூறியிருக்கிறார். அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து குடும்பத்தில் அமைதி நிலவ நிர்வாண பூஜைக்கு ஒத்துழைக்கும்படி என்னிடம் வலியுறுத்தினார்.

பல இடங்களில் இதேபோல் நிர்வாண பூஜை நடத்தியிருப்பதாகவும் பிரகாசன் கூறியிருந்தார். அவர்களின் தொல்லை அதிகரித்ததை தொடர்ந்தே போலீசில் புகார் அளித்ததாகவும், கணவரும், அவரது நண்பரான பிரகாசனும் சிறையில் இருந்து வெளியே வந்தால் அவர்களால் எனக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : ’படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் கண்டிப்பாக சென்றடையும்’..!! வெற்றி மாறனின் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!

English Summary

Investigation revealed that Prakash kept insisting to the girl’s family to perform Nirvana Puja to fulfill her wishes.

Chella

Next Post

நீங்க அப்போவே ஆக்ஷன் எடுத்திருந்தால், என் மகள் உயிரோட இருந்திருப்பா..!! - பெண் மருத்துவரின் தந்தை ஆதங்கம்!! 

Wed Sep 18 , 2024
Kolkata doctor's father criticises Mamata Banerjee's inaction: 'Daughter would have been alive if...'

You May Like