fbpx

துண்டான கையை அசால்டாக இன்னொரு கையில் எடுத்துக் கொண்டு ராஜநடை போட்டு வந்த இளைஞரால் பரபரப்பு….!

ஒரு இளைஞர் ரயிலில் இருந்து கீழே குதித்ததால், அப்போது ஏற்பட்ட விபத்தில், அவருடைய ஒரு கை துண்டாகிப் போனது.

ரயிலில் இருந்து, கீழே குதித்ததில், ஏற்பட்ட விபத்தில், கை துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், அந்த கையை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டு, சாலையில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், பாகல்பூர் சுல்தான் கஞ்ச் பகுதியில், ஒரு இளைஞர் ரயிலில் இருந்து குதித்த போது எதிர்பாராத விதமாக, துண்டான தன்னுடைய கையை, மற்றொரு கையில் எடுத்துக்கொண்டு, சாலையில் நடந்து சென்றுள்ளார். இதை கவனித்த பொதுமக்கள், பீதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்த நபர்கள் இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும், சிலர் இந்த காட்சியை தங்களுடைய செல்போனில் பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அந்த இளைஞரின் பெயர் சுமன்குமார் என்பது தெரியவந்தது.

மேலும், காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தவறுதலாக தடுமாறி, கீழே விழுந்ததால், ஒரு கை துண்டாகிவிட்டது என்றும், அந்த கையை மறுபடியும் இணைப்பதற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதாக அந்த இளைஞர் காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.

ஆகவே, அந்த இளைஞரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இளைஞரின் இந்த செயல்காரணமாக, அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.

Next Post

சமூக வலைதளம் மூலம் வருமானம் ஈட்டுபவரா? நீங்களும் வரி செலுத்த வேண்டுமா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!! மாட்டிக்காதீங்க..!!

Thu Sep 7 , 2023
தற்போதைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமுக வலைதளங்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுவது இதில் கிடைக்கும் வருமானம் தான். தங்களின் பிரத்யேக கண்டென்டுகளை பதிவேற்றி அதில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்களை நிறுவனங்கள் கண்டென்ட் உரிமையாளர்களுக்கு பகிர்ந்து வழங்குகின்றன. முன்னதாக இதன் மூலம் ஈட்டும் வருவாயில் வரி செலுத்த வேண்டும் என்ற வரம்பு இல்லாமல் இருந்தது. தற்போது அனைவரும் இதில் கிடைக்கும் வருவாயில் […]

You May Like