fbpx

“இந்தியாவை விட சீனா-க்கு முக்கியதுவம் கொடுத்தவர் நேரு”: ஜெய்சங்கர்

இந்தியாவை விட சீனாவுக்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறியதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வர்த்தக சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவை விட சீனாவுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். 1950-ல், உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல், நேருவிடம் சீனாவைப் பற்றி எச்சரித்தார்.

ஆனா, நேரு, நீங்கள் சீனர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகப்படுகிறீர்கள் என்று படேலுக்கு பதிலளித்தார். மேலும், இமயமலையைத் தாண்டி யாரும் இந்தியாவை தாக்குவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

அதன் பிறகு ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கொடுக்கப்பட வேண்டுமா? என்பது பற்றிய விவாதம் நடந்தது. அப்போது நேரு, ‘ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு தகுதி உள்ளது. ஆனால் முதலில் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.

இன்று நாம் இந்தியா முதலில் என்பது பற்றி பேசுகிறோம். ஆனால், சீனாதான் முதல் என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு.

முன்னாள் பிரதமர் நேருவின் கடந்த கால தவறுகளால்தான் இந்தியப் பகுதியின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது.

இருப்பினும், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில், காலம் காலமாக இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது” என பேசினார்.

மேலும், “இன்று நாம் நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, ​​சிலர் நமது எல்லைகளை பழையபடி மாற்றுங்கள் என்று கூறுகிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நமது எல்லைகள்தான். அதை நாம் ஒருபோதும் சந்தேகிக்கக்கூடாது. காஷ்மீர் விஷயத்தில் நம்மிடம் ஒரு பாராளுமன்ற தீர்மானம் உள்ளது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” என தெரிவித்தார்

Next Post

'தேர்தல் முடியும் வரை வீட்டிற்கே வர வேண்டாம்'..!! MLA மனைவிக்கு அதிரடியாக உத்தரவிட்ட கணவர்..!!

Wed Apr 3 , 2024
மத்தியப்பிரதேசத்தில் பிஎஸ்பி சார்பில் போட்டியிடும் நபர் தேர்தல் வரை வீட்டுக்கு வர வேண்டாம் என்று தனது மனைவியான காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு உத்தரவிட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் பாலாகாட் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக அனுபா முஞ்சாரே உள்ளார். இவரது கணவர் கன்கர் முஞ்சாரே பாலாகாட் மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடியும் வரை […]

You May Like