கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்..
விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு பதிலளித்தார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் “ விவசாயிகள் மீது அக்கறை உள்ளது போல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.. அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரமும், மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் 18 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.. கோடை காலமாக இருந்தாலும், மின் தேவை அதிகரித்தாலும் இந்த 18 மணி நேர மும்முனை மின்சார சேவை தொடர்ந்து வழங்கப்படும்.. ..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ மின் தேவை என்பது தற்போது அதிகரித்துள்ளது.. 2022-ம் ஆண்டை விட, இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சுமார் 18,000 மெகாவாட் அளவுக்கு மின் தேவை அதிகரிக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த தேவையை பூர்த்தி செய்ய, இந்த 3 மாதங்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கோடை காலத்தில் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு, சீரான மின் விநியோகம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.. எனவே கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது..
அடுத்த ஆண்டு தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும். மின்சார வாரியம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்..” என்று தெரிவித்தார்..