fbpx

”இந்த 2 பேரும் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதியில்லை”..!! அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்..!!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு செல்ல தகுதி இல்லை என்று சொல்லி 2 போட்டியாளர்களை மற்ற ஹவுஸ் மேட்ஸ் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்குமோ என்ற அச்சமும் போட்டியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு சரியாக நேரம் கணித்து சொல்ல வேண்டும் என பல டாஸ்க் நடக்கிறது. மேலும், ஒவ்வொரு சீசனிலும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு நேரடியாக ஒருவர் இறுதிப் போட்டிக்கும் செல்லலாம். அந்த வகையில் இந்த வாரம், டிக்கெட் டூ ஃபினாலேக்கு செல்ல தகுதியில்லாத இரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்து சொல்ல சொல்கிறார் பிக்பாஸ்.

அதன்படி, பெரும்பாலான போட்டியாளர்கள் அர்ச்சனா மற்றும் விஜய் ஆகிய இருவரையும் டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு தகுதியில்லாதவர்களாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் அர்ச்சனா பெயரை தினேஷூம் சொல்லி இருக்கிறார். இதனால், அர்ச்சனா கோபமடைந்து விசித்ராவிடம் புலம்பி வருகிறார். ’அண்ணா என கூப்பிட்டேன். ஆனால், கூடவே இருந்துவிட்டு இவர் இப்படி பண்ணிருக்கிறது கடுப்பா இருக்கு’ எனக் கூறியுள்ளார்.

Chella

Next Post

காலையில் ஃப்ரியா போக சப்போர்ட்டாக இருக்கும் சப்போட்டா.! இவ்வளவு நன்மைகள் இருக்கா உடலுக்கு.?

Wed Dec 13 , 2023
இனிப்பான சுவை கொண்ட சப்போட்டா பழம் இந்தியா, தாய்லாந்து மற்றும் மெக்சிகோ நாடுகளில் அதிகமாக விளைகின்ற ஒரு பழமாகும். ஏராளமான ஊட்டச்சத்துக்களை இந்த பழம் உள்ளடக்கி இருக்கிறது. இந்த பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டின், வைட்டமின் சி, ஃபோலேட், இரும்புச்சத்து, தாமிரம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் பி5 மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்திருக்கிறது. இதை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும் பல்வேறு விதமான நன்மைகளையும் தருகிறது. இந்தப் பழத்தின் நன்மைகள் என்ன என்று […]

You May Like