சூறாவளி காற்று குறித்து மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (செப்.10ஆம் தேதி) இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுக்கூடும்.
இதனால், அன்றைய தினம் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், வரும் 11ஆம் தேதி தெற்கு இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல வரும் 12ஆம் தேதி இலங்கை கடலோர பகுதிகள், தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அன்றைய தினமும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.