வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சனி மற்றும் செவ்வாயின் நிலையால் சமசப்தம யோகம் உருவாகிறது. இந்த யோகமான சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் இருக்கும் போது உருவாகும். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோக காலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள், பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்: சமசப்தம யோகத்தால் கடக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது. இக்காலத்தில் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு மோசமடையக்கூடும். மேலும் இக்காலத்தில் உங்கள் தாயுடனான உறவு மோசமடையும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் எந்த ஒரு புதிய வேலைகளைத் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. ஹோட்டல் உணவுகளை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தம யோகமானது மோசமான பலன்களை வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளால் சிரமப்பட வேண்டியிருக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை வர வாய்ப்புள்ளது. எனவே யாருடனும் இக்காலத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலம் சற்று மந்தமாக இருக்கும்.
மேஷம்: சமசப்தம யோகமானது மேஷ ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வரும். இந்த யோக காலத்தில் பணத்தை முதலீடு செய்வதாக இருந்தால், அதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பண இழப்பை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், உங்கள் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.