தற்போது பல்வேறு வங்கி சேவைகள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கின்றன.. எனினும் பண பரிவர்த்தனைகளின் எஸ்எம்எஸ், ஐஎம்பிஎஸ் நிதி பரிமாற்றம், காசோலை அனுமதி அல்லது ஏடிஎம் திரும்பப் பெறும் வசதி எதுவாக இருந்தாலும், முற்றிலும் இலவசமாக கிடைப்பதில்லை.. அனைத்து சேவைகளுக்கும், வங்கி தனது வாடிக்கையாளர்களிடமிருந்து கண்டிப்பாக சில கட்டணங்களை வசூலிக்கிறது. உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் வசூலிக்கப்படும் அந்த 7 சேவைகளைப் பற்றி பார்க்கலாம்..
பண பரிவர்த்தனை : ஒவ்வொரு வங்கியும் பண பரிவர்த்தனை வசதியை வழங்குகிறது, ஆனால் இந்த பரிவர்த்தனை ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே செய்ய முடியும். அந்த நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பண பரிவர்த்தனை செய்தால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஒவ்வொரு வங்கிக்கும் அதன் விதிகளின்படி மாறுபடும். பொதுவாக அரசு வங்கியில் 20 முதல் 100 ரூபாய் வரை இருக்கும்.
குறைந்தபட்ச இருப்பு : வங்கிக் கணக்கில் இருப்புத்தொகை குறிப்பிட்ட வரம்பு வரை பராமரிக்கப்பட வேண்டும். உங்கள் கணக்கில் அதற்கும் குறைவான தொகை இருந்தால், குறைந்தபட்ச இருப்புத் தொகையை நீங்கள் செலுத்த வேண்டும். உதாரணமாக, HDFC வங்கியின் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு 10000 இருப்பது அவசியம், இதற்குக் குறைவான தொகை இருந்தால், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும். எனினும் வங்கிகளுக்கு வங்கி இந்த கட்டணம் மாறுபடும்..
IMPS கட்டணங்கள் : அனைத்து வங்கிகளும் NEFT மற்றும் RTGS பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளன, ஆனால் பெரும்பாலான வங்கிகள் IMPS பரிவர்த்தனைகளுக்கு இன்னும் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் ரூ.1 முதல் ரூ.25 வரை இருக்கலாம்.
காசோலை : உங்கள் காசோலை ரூ. 1 லட்சம் வரை இருந்தால், நீங்கள் வங்கியில் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை, ஆனால் இதற்கு மேல், நீங்கள் கிளியரன்ஸ் கட்டணமாக ரூ. 150 செலுதுத்த வேண்டும்.. மறுபுறம், நாம் காசோலைகளைப் பற்றி பேசினால், சேமிப்புக் கணக்கிற்கு எஸ்பிஐ வங்கி 10 காசோலைகளை மட்டுமே இலவசமாக வழங்குகிறது.. மேலும் காசோலைகளுக்கு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஏடிஎம் பரிவர்த்தனை : ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இலவசமாக கிடைக்கும். குறிப்பிட்ட எண்ணிக்கையை விட அதிகமான பரிவர்த்தனைகளின் எண்ணிக்கைக்கு வங்கி கட்டணம் விதிக்கிறது. ஒவ்வொரு வங்கியும் வசூலிக்கும் தொகை வேறுபட்டது. இதற்கு பெரும்பாலான வங்கிகள் ரூ.20-50 வரை வசூலிக்கின்றன.
எஸ்எம்எஸ் : உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்போது அல்லது டெபிட் செய்யப்படும் போது வங்கி உங்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்புகிறது. இதற்கு வங்கிகளும் கட்டணம் வசூலிக்கின்றன. ஆனால் இந்த கட்டணம் மிகவும் சிறியது என்பதால் பெரும்பாலானவர்களுக்கு இது பற்றி தெரியாது. இது ஆக்சிஸ் வங்கியில் மாதத்திற்கு ரூ.5 ஆகவும், ஐசிஐசிஐயில் ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ.15 ஆகவும் உள்ளது. இதனால் வெவ்வேறு வங்கிகளுக்கு கட்டணம் வேறு.
புதிய அட்டை பெற : உங்கள் டெபிட் கார்டை தொலைத்துவிட்டால், மற்றொரு கார்டைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் ரூ. 50 முதல் ரூ. 500 வரை இருக்கலாம். ஒவ்வொரு வங்கிக்கும் வெவ்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.