fbpx

குடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும், இந்த 5 உணவுகளை கட்டாயமாக சாப்பிடக்கூடாது.!?

நம் உடலின் செரிமான மண்டலம் சீரான செயல்பாடு நடைபெறுவதற்கு குடல் முக்கியமான உறுப்பாக இருந்து வருகிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் குடலின் வழியாகத்தான் இரைப்பையை அடைந்து செரிமானம் நடைபெறுகிறது. நாம் உண்ணும் உணவின் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்களை பிரித்து எடுப்பதும் கழிவுகளை உடலில் இருந்து நீக்கும் வேலையையும் குடல் செய்து வருகிறது.

நம் உடல் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் குடலில் வளரும் நல்ல பாக்டிரியாகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  எனவே நாம் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு குடலை பாதுகாக்க வேண்டும். ஆனால் ஒரு சில உணவுகளை உண்பதன் மூலம் குடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அவை என்னென்ன உணவுகள் என்பதை குறித்து பார்க்கலாம்

செயற்கை சுவையூட்டிகள்: தற்போது ஹோட்டல் மற்றும் கடைகளில் விற்கப்படும் பல உணவுப் பொருட்களில் சுவைக்காக செயற்கையாக தயாரிக்கப்பட்ட சுவையூட்டிகளை உணவுகளில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை குழந்தைகளும், பெரியவர்களும் உண்ணும் போது பலவிதமான நோய்கள் உடலில் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்த உணவுப் பொருட்களில் உள்ள செயற்கை சுவையூட்டிகள் குடலில் கலந்து அமிலத்தன்மையை அதிகப்படுத்தி மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

சர்க்கரை: நாம் தினமும் சாப்பிடும் சோறு மற்றும் பிற காய்கறிகளிலேயே நம் உடலுக்கு தேவையான சர்க்கரை நிறைந்துள்ளது. இது போக டீ, காபி, இனிப்பு பொருட்கள் போன்றவற்றில் அளவுக்கு அதிகமான சர்க்கரையை சேர்த்துக் கொள்வதால் குடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பொரித்த உணவுகள்: பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணும் போது நம் உடலுக்கு பல்வேறு கேடுகள் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் குறிப்பாக இந்த எண்ணெயில் பொறித்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் குடல் புற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இது போக பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால் போன்றவைகளை எடுத்து கொள்ளும் போது குடலுக்கு மோசமான பின்விளவை ஏற்படுத்தும். இந்த ஐந்து உணவு பொருட்களையும் கட்டாயமாக போதுமான அளவு தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Rupa

Next Post

கைகளுக்கு அழகு சேர்க்கும் மருதாணி.. உடலில் இவ்வளவு நோய்களை தீர்க்குமா.!?

Wed Jan 31 , 2024
தமிழ்நாட்டில் பலரும் மருதாணி இலையை அரைத்து அழகுக்காக கைகளில் வைத்து கொள்கின்றனர். அந்த காலத்தில் இருந்து இன்று வரை திருமணம் என்றாலே அந்த இடத்தில் மருதாணி இல்லாமல் இருக்காது. தற்போதுள்ள காலகட்டத்தில் திருமணத்திற்காக மருதாணியை வைப்பதற்கு மெகந்தி பங்ஸன் என்று தனி நிகழ்ச்சியாகவே வைக்க ஆரம்பித்து விட்டனர். அந்த அளவிற்கு மருதாணி சிறப்புவாய்ந்ததாக உள்ளது. மேலும் மருதாணி அழகிற்காக மட்டுமல்லாமல், உடலில் பல்வேறு நோய்களை விரட்டவும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு […]

You May Like