fbpx

6 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு வாரம் 2️ முறை இந்த இரு வகுப்புகளும் கட்டாயம்……! ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி சுற்றறிக்கை…..!

மாணவர்களிடையே கலை நயத்தை விதைக்கும் விதத்தில், கலை தெரு விழாவில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்யும் விதமாக 6 முதல் 9ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனர் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுடைய கலை திறன்களை வெளிக்கொண்டுவரும் விதமாக கலையரங்க பயிற்சி மாணவர்களுக்கு சென்ற வருடம் வழங்கப்பட்டது.

அதேபோன்று நடப்பு ஆண்டும் 6 முதல் 9ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு கலை பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் கலை ஆசிரியர்களை பயன்படுத்தி இந்த பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

வாரம் தோறும் 2 பாட வேலைகளில் கலை மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் இதற்காக பிரத்தியேக கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு இது தொடர்பான விவரங்கள் செயலியில் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சந்தேகமா…..! கவலை வேண்டாம் தொலைபேசி எண்களை அறிவித்த தமிழக அரசு…..!

Sun Jul 16 , 2023
தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது இதற்காகவே வரும் இருபதாம் தேதி முதல் டோக்கன் வழங்கும் பணி ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக ஆரம்பமாக இருக்கிறது. இதற்கு நடுவில் சென்ற சில வாரங்களுக்கு முன்னதாக இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாக தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தான் இந்த திட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் […]

You May Like