பிப்ரவரி 1 முதல், சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் மத்திய அமைப்பால் நிராகரிக்கப்படும் என்று NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) தெரிவித்துள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைத்த புதிய விதிமுறைகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனை ஐடிகள் இனி சிறப்பு எழுத்துக்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படாது. அதாவது @,#,%,& உள்ளிட்ட சிறப்பு உருக்கள் கொண்ட பரிவர்த்தனைகள் நிகாரிக்கப்படும். எனவே ஐடிகளில் எழுத்துகள் மற்றும் எண்களில் இருப்பது அவசியம் என தெரிவித்துள்ளது. ஐடிகளில் சிறப்பு எழுத்துக்களை உள்ளடக்கிய எந்தவொரு பரிவர்த்தனைகளும் பிப்ரவரி 1 முதல் மத்திய அமைப்பால் தானாகவே நிராகரிக்கப்படும்.
UPI பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை ஒழுங்குப்படுத்த NPCI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அனைத்து கட்டண சேவை வழங்குநர்களும் இணக்கத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறது. UPI தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுக்கு இணங்க பரிவர்த்தனை ஐடிகளுக்கு எண்ணெழுத்து எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துமாறு UPI துறையில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் NPCI அறிவுறுத்தியது. இந்த நடைமுறை பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து சாதனை அளவில் உயர்ந்து வருகின்றன. NPCI தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 16.73 பில்லியனை எட்டியது, இது நவம்பரில் 15.48 பில்லியனில் இருந்து 8% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு டிசம்பரில் ரூ.23.25 லட்சம் கோடியை எட்டியது, முந்தைய மாதத்தில் இது ரூ.21.55 லட்சம் கோடியாக இருந்தது. தினசரி சராசரி பரிவர்த்தனை எண்ணிக்கையும் டிசம்பரில் 539.68 மில்லியனாக உயர்ந்தது, நவம்பரில் 516.07 மில்லியனாக இருந்தது.
Read more : மீதமான சாதத்தை மீண்டும் சுடுப்படுத்தி சாப்பிடலாமா.? எப்படி சாப்பிட்டால் பிரச்சனை வராது..?