சிம் கார்டு தொடர்பான விதிகளை அரசு மாற்றியுள்ளது. புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் இப்போது புதிய சிம் கார்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. சிம் கார்டு அவர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி 18 வயதுக்குட்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம் கார்டுகளை நிறுவனங்கள் விற்க முடியாது.
அதே நேரத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஆதார் அல்லது டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஏதேனும் ஆவணத்துடன் தங்களின் புதிய சிம்மைத் தாங்களே சரிபார்த்துக் கொள்ளலாம். மத்திய தொலைத்தொடர்பு துறையின் இந்த நடவடிக்கையானது, செப்டம்பர் 15, 2021 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.. புதிய விதிகளின்படி, புதிய மொபைல் இணைப்புக்கான UIDAI இன் ஆதார் அடிப்படையிலான e-KYC சேவையின் மூலம் சான்றிதழுக்காக பயனர்கள் 1 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும்.
யாருக்கெல்லாம் சிம் கார்டு கிடைக்காது..?
- இனி 18 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு புதிய சிம் கார்டு கிடைக்காது.
- மேலும், ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அத்தகைய நபருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது.
- அப்படி ஒருவர் விதிகளை மீறி பிடிபட்டால், சிம் கார்டு விற்கும் டெலிகாம் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய விதிகளின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் UIDAI அடிப்படையிலான சரிபார்ப்பு மூலம் தங்கள் வீட்டில் சிம் பெறுவார்கள். மொபைல் இணைப்பு வாடிக்கையாளர்களுக்கு ஆப்/போர்ட்டல் அடிப்படையிலான செயல்முறை மூலம் வழங்கப்படுகிறது, இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மொபைல் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்.