தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் டிஜிட்டல் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆதார் மோசடி, வாட்ஸ் அப் மோசடி என பல்வேறு மோசடிகளில் பலரும் சிக்கி பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும், உங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிக பணம் செலுத்த வேண்டுமென்றும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 17,000 வாட்ஸ் அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கி அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பெயரில் உங்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது, +371, +381 என்ற எண்களில் இருந்து உங்களுக்கு திடீரென மிஸ்டு கால் வரும். அது யார் என அறிய நீங்கள் திரும்ப ஃபோன் செய்தால், அதற்கே உங்களுக்கு கிட்டத்தட்ட ரூ.1,200 பில் வந்துவிடும். அதே சமயம், அவர்கள் உங்களின் பர்சனல் டேட்டாவையும் திருடுகிறார்கள் என எச்சரிக்கப்படுகிறது.
Read More : ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி..? வாகன ஓட்டிகளே இது கட்டாயமாம்..!! வழிமுறைகள் இதோ..!!