fbpx

இவர்கள் கட்டாயம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!!! – தமிழ்நாடு மின்வாரியம்

தமிழகத்தில் ஒரு சில மின் நுகர்வோர் ஒருவருடைய பெயரிலே இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் அதாவது வாடகை வீடுகளுக்கு மின் இணைப்பை பெற்றுள்ளனர். அதனால் நுகர்வோர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதேபோல ஒரு வீட்டிற்கு பல மின் இணைப்புகளை நுகர்வோர் வாங்கியுள்ளனர். இவர்கள் ஒரே ஆதார் எண்ணை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆதார் எண்ணை ஏன் அனைத்து இணைப்புகளும் தர வேண்டும் என்று மின் நுகர்வோர்கள் கேள்விக்கு மின்வாரியம் விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வழங்கப்படும் 100 யூனிட் மானிய மின்சாரம் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதனை சீர்படுத்தவே இவ்வாறு பல இணைப்புகள் கொண்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்கும்படி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் அவர்களின் ஆதார் எண்ணை கூட மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினர்.

Kathir

Next Post

’நான்கைந்து மின் இணைப்புகள் இருக்கு... ஆதார் இணைக்க முடியுமா’.? உங்கள் சந்தேகத்திற்கு பதில் இங்கே..!!

Mon Nov 21 , 2022
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை வைத்திருக்கும் நுகர்வோர், அவற்றிற்கு தங்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ”தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தெரிவித்துள்ளது. மேலும், அதற்கான பணியையும் தொடங்கியுள்ளது. இதனால், ஆதார் எண்ணை […]

You May Like