Gun Shooting: அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே உள்ள ரோசெஸ்டர் ஹில்ஸில் உள்ள நீர் பூங்காவில் சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்றுமாலை குழந்தைகளுடன் பெற்றோர்கள் குவிந்திருந்தனர். அப்போது, மாலை 5 மணியளவில் பூங்காவிற்கு அருகே வாகனத்தில் இருந்து இறங்கி நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் சுமார் 28 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தலைமறைவாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Readmore: PM Kissan 17-வது தவணை ரூ.2,000 வரும் 18-ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!