fbpx

“2 1/2 சவரன் நகைய காணோங்க” பிரபல நடிகை அளித்த பரபரப்பு புகார்..

80களில் தனது எதார்த்தமான நடிப்பால், தனக்கென்ற ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியவர் தான் நடிகை சீதா. தமிழ் சினிமாவில் ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, ரஜினிகாந்த், விஜயகாந்த், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சீதா. தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக உள்ளார். பார்த்திபனின் முன்னாள் மனைவியான இவர், சென்னை விருகம்பாக்கம், புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். நடிகர் சதீஷை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அவர், இப்போது அவரிடம் இருந்தும் பிரிந்ததாக கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இவரது வீட்டிலும் திருடர்கள் தங்களின் கைவரிசையை காட்டியுள்ளனர்.

ஆம், அவரது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போய்யுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சீதா, சம்பவம் குறித்து சீதா சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது ஜிமிக்கியை யாரோ திருடிவிட்டதாக குறிப்பிட்ட அவர், காணாமல் போன தனது இரண்டரை சவரன் ஜிமிக்கியை கண்டுபிடித்து தருமாறு புகாரில் கூறியுள்ளார். புகாரின் பேரில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜிமிக்கியை திருடியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read more: “தாத்தா, என்ன இங்க தொடாதீங்க” கெஞ்சிய சிறுமி; கோவிலில் ஆள் இல்லாத போது, 70 வயது பூசாரி செய்த காரியம்..

English Summary

thiefs-has-taken-gold-jewel-from-actress-house

Next Post

செவ்வாழைப் பழத்தை அதிகமா சாப்பிட்டா இத்தனை பிரச்சனை வருமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்...

Sat Nov 23 , 2024
eating-too-much-redbanana-is-not-healthy

You May Like