fbpx

பள்ளிகளில் தேசியக் கொடி ஏற்றும்போது கவனிக்க வேண்டியவை..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் 78-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சியில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்த சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் சிறந்த முறையில் சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும். பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள், மலர்களால் அலங்கரித்து தேசிய கொடி ஏற்றி விழாவை கொண்டாடலாம். ஊராட்சி மன்ற நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழாவில் பங்கு பெற வைக்கலாம். பிளாஸ்டிக் வகையிலான தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம்.

தேசிய கொடியை தலைகீழாகவோ, கிழிந்ததையோ ஏற்றக்கூடாது. தேசிய கொடியை ஏற்றுவதில் கவனமுடன் இருக்க வேண்டும். இதுசாா்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வலியால் கதறி துடித்த 5 வயது சிறுமி..!! ஓவிய ஆசிரியரால் தீவிர சிகிச்சை..!! பள்ளியில் வைத்து பலாத்காரம்..!!

English Summary

The School Education Department has advised all types of schools in Tamil Nadu to celebrate Independence Day in a grand manner.

Chella

Next Post

'Work From Home' அழைக்கும் பிரபல ஐடி நிறுவனம்..!! மிஸ் பண்ணிடாதீங்க.. ரெடியா?

Wed Aug 14 , 2024
Amazon's IT company, which has a foothold in various fields, is going to select people who need to work from home. Degree completion candidates can apply for this job.

You May Like