நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று 11-வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கொடி ஏற்றி வைத்தார்.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். இதில், மறைந்த கேப்டன் விஜயகாந்தை பாராட்டி வழங்கப்பட்ட விருதினை பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஜயகாந்த் இல்லாத ஒவ்வொரு நிமிடத்தையும் நினைத்து பெரும் துன்பம் அடைவதாக கூறி கண்கலங்கினார். அவர் மேடையிலேயே கண்கலங்கியது காண்போரை கலங்கச் செய்தது.