fbpx

#இராமநாதபுரம் : பாம்பு கொத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மூன்றாம் வகுப்பு மாணவன்..!

இராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள தர்மபுரத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை செயல்படும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தர்மபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பிள்ளைகள் இங்கு தான் பயின்று வருகின்றனர். 

கிட்டத்தட்ட 200க்கும் மேல் மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென பாம்பு ஒன்று வகுப்பறைக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து பாடம் கவனித்துக் கொண்டிருந்த பிரியதர்ஷன் என்ற மூன்றாம் வகுப்பு மாணவனின் கையில் சட்டென்று கொத்திவிட்டது. 

இதனை தொடர்ந்து அந்த பாம்பினை கண்டதும் மற்ற மாணவர்கள் கத்தி அலரி கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே அடித்து பிடித்து ஓடியுள்ளனர். பாம்பு கடித்த மாணவனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். 

மேலும் மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவன் நலமுடன் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. வகுப்பறையில் உள்ளே மாணவனை பாம்பு கடித்த சம்பவமானது பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பு மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு...! மார்ச் 31, 2023-ம் ஆண்டு வரை நீட்டிப்பு...! மத்திய அரசு

Thu Dec 15 , 2022
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம் பெயர்ந்தவர்கள் உள்பட அனைத்து பயனாளர்களும் தங்களது மாதாந்திர உணவு தானியங்களை தற்போதைய ரேஷன் அட்டை அல்லது பயோ மெட்ரிக் அங்கீகாரத்துடனான ஆதார் எண்ணை பயன்படுத்தி நாட்டில் எங்கும் உள்ள நியாய விலைக்கடைகளில் வாங்க முடியும் என்று மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் தெரிவித்தார். ஒருங்கிணைந்த பொது விநியோக மேலாண்மை முறையில் ஏப்ரல் 2018-ம் ஆண்டு ரூ.127.3 கோடிக்கு […]

You May Like