இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் மூன்றாவது ஜி20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம் இன்று முதல் 21, 2023 வரை தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது.
நிலையான நிதி செயற்குழு கூட்டத்தின் முதல் இரண்டு கூட்டங்கள் முறையே கவுகாத்தி மற்றும் உதய்பூரில் நடைபெற்றன. 3வது சந்திப்பின் போது, நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டம், 2023 பணித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழங்கல்களுக்கான பரிந்துரைகளை இறுதிசெய்வதற்கான விவாதங்களை வழிநடத்துவதில் கவனம் செலுத்தும்.
நிலையான நிதி செயற்குழு கூட்டமானது ஜி 20 நிலையான நிதி திட்ட வரைபடத்தில் திட்டமிடப்பட்டுள்ள செயல்களை முன்னெடுப்பதற்கு மூன்று முன்னுரிமைப் பகுதிகளில் வேலை செய்து வருகிறது