தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
➥ அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.
➥ சென்னையில் ரூ.100 கோடியில் சிங்கப்பூர் உதவியுடன் அறிவியல் மையம் அமைக்கப்படும்.
➥ தமிழ்நாடு உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
➥ அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ள ரூ.10 கோடி ஒதுக்கீடு.
➥ 8 மாவட்டங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
➥ பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்கம் விளையாட்டு சேர்க்கப்படும்.
➥ 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான அட்டை வழங்கப்படும்.
➥ தலை சிறந்த 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
➥ 45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்.