கடலூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சி ஒன்று திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கோயம்புத்தூரில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த அரசியல் ஆதாயம் பெறுகின்ற நோக்கில் ஆளுநரும் பாஜகவும் செயல்பட்டு வருவது அதிர்ச்சியாக இருக்கிறது.
திமுக ஆட்சிக்கு எதிரான நபராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்பது பெரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. அவர் ஆளுநர் என்பதை எல்லாம் மறந்துவிட்டு ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்பட்டு வருகிறார்.
அரசு விழாக்கள் நடைபெறும் இடங்கள் அனைத்திலும் சென்று ஆன்மீகம், அரசியல் என்று பேசுகிறார். மதவாதத்தை தூண்டுகிறார். மற்றும் திமுக அரசிற்கு எதிரான வகையில் அவதூறுகளை பரப்பி வருகின்றார்.
பாஜக வட மாநிலங்களைப் போல வன்முறையை தூண்டி தமிழகத்திலும் குளிர் காய நினைக்கிறது. தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கிறது. மாநில அரசின் பல்வேறு உரிமைகளில் தலையிடுகிறது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.