திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை எங்களுக்குச் சொந்தமானது என்பதால், எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்று தொல்லியல் துறை தெரிவித்தது. இதற்கு உயர்நீஹிமன்ற கிளை நீதிபதிகள், ”திருப்பரங்கும் மலை அனைவருக்கும் சொந்தமானது என்றும் கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியில்லை” என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலை மீது வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம். ஒற்றுமையே பலம் என்பதால், அனைத்து மதத்தினர் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறோம். இரு சமூகத்தினரும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற கிளை ஒத்திவைத்தது.
வழக்கின் பின்னணி என்ன..?
மதுரையைச் சோ்ந்த கண்ணன் என்பவர், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு எந்தவிதமான உயிா்ப் பலியும் கொடுக்கக் கூடாது. மலையின் உச்சியில் சிக்கந்தா் பாதுஷா தா்கா உள்ள நிலையில், இந்த தா்காவின் சாா்பில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு உணவு வழங்கப்படுகிறது. இது பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து சாப்பிடவும் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதேசமயம், ”திருப்பரங்குன்றம் மலையை தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் இந்த மலையை சமணா் குன்று என அறிவிக்க வேண்டும் என்றும் நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தக் கூடாது என வலியுறுத்தி பலரும் வழக்குகள் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.